நாதக நிர்வாகிகள் மோதல் pt
தமிழ்நாடு

"காளியம்மாளை நிறுத்த தயாரா?" சீமானுக்கு அதிருப்தி மாவட்ட செயலாளர் கேள்வி.. திடீரென வெடித்த மோதல்!

வாணியம்பாடியில் நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக செய்தியாளர்களை சந்தித்த போது, அங்குவந்த நாம்தமிழர் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு மாவட்ட செயலாளரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

PT WEB

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன், இவர் கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து நாம் தமிழர் கட்சியின் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்துவந்துள்ளார்.

ஆனால் தற்போது நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நம்பகத்தன்மை குறைந்துவிட்டதாக கூறி, தேவேந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் 10க்கும் மேற்பட்டோர், கட்சியில் இருந்து விலகுவதாக, வாணியம்பாடியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய தேவேந்திரன், ”நாம் தமிழர் கட்சியில் நம்பிக்கை தன்மை இழந்து விட்டதாகவும், அவர் யாரிடமும் கூட்டு வைக்க தயாராக இல்லையெனவும், தமிழ் தேசியத்தை ஏற்றுக்கொண்டவர்களுடன் பயணிக்கவில்லை மற்றும் படித்தவர்களை வேட்பாளராக முன்நிறுத்திய போது, அதை மறுத்தார். உங்களால் காளியம்மாளை நிறுத்த முடியுமா?” என்ற கேள்விகளை எழுப்பி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அப்போது அங்கு வந்த நாதக நிர்வாகி பிரச்னையை ஏற்படுத்தி வாக்குவாதம் நிகழ்ந்த நிலையில், அது அடிதடியாக மாறி பரபரப்பான சூழல் ஏற்பட்டது.