டாட்டூ புதிய தலைமுறை
தமிழ்நாடு

Tattoo போடுவதால் ஏற்படும் தீமைகள்? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

கழுத்துப் பகுதியில் டாட்டூ போட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், டாட்டூ போடுவதால் ஏற்படும் பின்விளைவுகளைத் தவிர்க்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அந்த துறையினர் தெரிவிக்கின்றனர்.

PT WEB

டாட்டூ என்று கூறப்படும் பச்சை குத்தும் பழக்கம் ஃபேஷனாக மாறி வருகிறது. பிரபல நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலரும் உடலில் பல்வேறு பகுதிகளில் டாட்டூ குத்திக் கொள்கிறார்கள். இந்த நிலையில், பெரம்பலூரைச சேர்ந்த கல்லூரி மாணவரான பரத், புதுச்சேரிக்குச் சுற்றுலா சென்றபோது, தனது கழுத்துப் பகுதியில் நங்கூரம் படத்தை டாட்டூவாகக் குத்தியுள்ளார். இதன்பின் ஊர் திரும்பிய பரத்திற்கு டாட்டூ குத்திய பகுதியில் புண் ஏற்பட்டு அதிக பாதிப்புக்குள்ளானார். அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார்.

பரத்தை பரிசோதித்த மருத்துவர்கள், ’டாட்டூ குத்தியதால் ஏற்பட்ட உடல் பாதிப்பில் ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்றும், அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது’ என்றும் கூறியுள்ளனர். ஃபேஷனாக பார்க்கப்பட்ட இந்த கலாசாரத்தால் பல சரும கோளாறுகள் ஏற்படுவதுடன் ரத்தத்தின் திறன் குறைவதும் பல உடல் நலப் பிரச்னைகள் ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது.