நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் மறைவு குறித்து நம்மிடையே பேசிய இயக்குநர் பி.வாசு, “அவர் மேக்கப் போட்டாலும் ஹீரோ, மேக்கப் போடலனாலும் ஹீரோ. அதுதான் அவர்கிட்ட ஸ்பெஷலே. நடிகனா, மனிதனா கீழுள்ளவங்ககிட்ட பேசவும் பழகவும்தான் அவர் என்றுமே விரும்புவார். அவங்க தோள்ல கைப்போட்டுதான் பேசுவார். கட்டி அணைச்சு சக தொழிலாளிகளை மதிப்பார். சாதாரண மனிதர்களைதான் அவருக்கு எப்பவுமே பிடிக்கும்”