தமிழ்நாடு

திண்டுக்கல் டூ பழனி: மின் ரயில் பாதையில் நாளை சோதனை ஓட்டம் - தெற்கு ரயில்வே எச்சரிக்கை

திண்டுக்கல் டூ பழனி: மின் ரயில் பாதையில் நாளை சோதனை ஓட்டம் - தெற்கு ரயில்வே எச்சரிக்கை

webteam

திண்டுக்கல் - பழனி புதிய மின் பாதையில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுவதால் ரயில் பாதையை நெருங்க வேண்டாம் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

திண்டுக்கல் - பழனி ரயில் பாதை பிரிவில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், இந்த புதிய 58 கிலோமீட்டர் மின்மய ரயில் பாதையில் நாளை முதன்மை தலைமை மின்சார பொறியாளர் சித்தார்த் ஆய்வு செய்ய உள்ளார். அவருடன் மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திண்டுக்கல் - பழனி இடையே சிறப்பு ரயில் மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த ஆய்விற்குப் பிறகு இந்த ரயில் பாதையில் ரயில்களை இயக்குவதற்காக 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்படும். பின்பு சிறப்பு ரயிலில் மின்சார எஞ்சின் பொருத்தப்பட்டு மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாயும் மின் பாதையை நெருங்குவதோ தொடுவதோ ஆபத்தை விளைவிக்கும் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆயவுக்குப் பிறகு ரயில்கள் மின்சார எஞ்சின் மூலம் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.