தமிழ்நாடு

அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் விழிப்புணர்வு முகாம் - சென்னையில் ஓர் வாய்ப்பு

அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் விழிப்புணர்வு முகாம் - சென்னையில் ஓர் வாய்ப்பு

webteam

மின்னணு முறையில் சந்தைப்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு முகாம் தமிழக அரசு தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனம் சார்பில் நடைபெறவுள்ளது.

சென்னை கிண்டி அருகே உள்ள தொழிற்பேட்டையில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் உள்ளது. இங்கு அவ்வப்போது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சிகள் உட்பட பல்வேறு தொழிற் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வரும் 10ஆம் தேதி மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது. அத்துடன் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு நிதி தொடர்ச்சி மற்றும் செயல்பாட்டு நிர்வாகம் குறித்த பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது. ரூ.200 பதிவு கட்டணமாக செலுத்தி இதில் முன்பதிவு செய்துகொள்ளலாம். 

இதுதவிர ஏற்றுமதி, இறக்குமதி குறித்தும் மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில் ஏற்றுமதி வாய்ப்புள்ள பொருட்கள் மற்றும் நாடுகளை கண்டறிதல், இறக்குமதியாளர் முகவரிகளை இணையதளங்கள் வழி கண்டறிதல், செயல்முறை பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. மேலும், ஏற்றுமதி தொழில் துவங்க செய்ய வேண்டிய பதிவுகள், விலை நிர்ணயம் செய்தல், பாதுகாப்பான பணம் பெறும் வழிகள் குறித்தும் கற்பிக்கப்படுகின்றன. இதுதவிர பொருளை பதப்படுத்துதல், சீரிய முறையில் பேக்கிங் செய்தல் உள்ளிட்ட சில பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சிக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுதொடர்பாக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள 86681 02600 மற்றும் 86681 01880 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.