தமிழ்நாடு

பரிசுப்பொருளுக்கு அடகு வைத்துவிடாதீர்கள் - வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

பரிசுப்பொருளுக்கு அடகு வைத்துவிடாதீர்கள் - வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

Sinekadhara

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, பிப்ரவரி 17-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக, ‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்...  வாக்காளர்கள் எதன் அடிப்படையில் வாக்களிக்க வேண்டும்?' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே. இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூக வலைதள பக்கங்களில் பகிரப்படும்.

ஆளும் அரசின் செயல்பாடுகள் சிறப்பாக தோன்றினால் திமுக +

இவர்களுக்கு அவர்களே பரவால்ல எனத்தோன்றினால் அதிமுக +

இருவருமே சரியில்லை புதுசா வேறொரு கட்சியின் வேட்பாளர்களில் ஒருவரோ சுயேட்சையில் ஒருவரோ வரட்டும் எனத் தோன்றினால் அவர்களுக்கு என

உங்கள் மனசாட்சிக்கு நேர்மையாக வாக்கினை செலுத்துங்கள்.

பணம்

பரிசுப்பொருளுக்கு அடகு வைத்துவிடாதீர்கள்...

ஜனநாயகத்தில் வாக்கு என்பது ஒவ்வொரு குடிமகனின் தனியுரிமை என்பதால் இவ்வளவுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்து.

இந்நேரமதில் நாம் யாரென்றே தெரியாமல் நமது நலம் விசாரிக்கும் வேட்பாளரை விட.., நாம் கலங்கும் வேளைகளில் நம்மை எண்ணி சிறிது சிந்தனை செய்யும் வேட்ப்பாளர் எவரோ அவருக்கு வாக்களிக்க வேண்டும்!... -----தேவேந்திரன்...

"நான் வெற்றி பெற்றால்.." என்று தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசுபவர்களை தவிர்த்து,

எந்த பதவியும்-பொறுப்பும் இல்லாதபோதும் கூட மக்களோடு மக்களாக களத்தில் நின்றும், மக்களின் குறைகளை கண்டறிந்து அதற்காக தொடர்குரல் கொடுத்தும்-போராட்டங்களை முன்னெடுக்கக்கூடிய ஊழியர்களுக்கு வாக்களிப்பீர்!

1)நம்ம ஊர் பற்றிய நிறை,குறைகள் தெரிந்தவருக்கு!

2)மகாத்மாவாக இல்லைனாலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் மனசாட்சி உள்ளவருக்கு!

3)வார்டில் உள்ள டாஸ்மாக்கை அகற்றுவதாக வாக்குறுதி தந்தவருக்கு!

4)கட்சிகாரரோ,சுயேட்சையோ அடுத்த 5ஆண்டு பொது பிரச்சனைகளில் முதல் ஆளாக வந்து நிற்பவருக்கு!

மாநில உரிமை….

மக்களைத் தேர்தல் நேரத்தில் மட்டுமே நெருங்கும் கட்சிகளை விடுத்து மக்களுக்காக எப்போதும் போராடும் கட்சி சார்ந்தோரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் என்பதால்... நமது வார்டுக்கு நல்ல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும், வார்டு சார்ந்த பிரச்சினைகள் எளிய முறையில் தீர்க்க கூடிய நபரை தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.