தமிழ்நாடு

'மாணவர்கள் என்னப்பா பாவம் பண்ணாங்க?’ - வாசகர்களின் ‘வாவ்’ கமெண்ட்ஸ்

'மாணவர்கள் என்னப்பா பாவம் பண்ணாங்க?’ - வாசகர்களின் ‘வாவ்’ கமெண்ட்ஸ்

Sinekadhara

தினமும் மாலை 7 மணிக்கு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் ஒரு தலைப்பு வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, பிப்ரவரி 5-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘கூடுகிறது சிறப்பு சட்டமன்றம்... மீண்டும் ஆளுநருக்கு மசோதா அனுப்பத் திட்டம்... நீட் விலக்கு சாத்தியமா? சவாலா?' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே. இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூக வலைதள பக்கங்களில் பகிரப்படும்.

நீட்.... முழுக்க முழுக்க அரசியல் ஆக்கப்பட்டு விட்டது.. எப்படியாவது பெற்று விடும் முனைப்பில் திமுக... ஒரு போதும் தர முடியாது என்ற எண்ணத்தில் மத்திய அரசு.. கடந்த ஆட்சி காலத்தில் பாஜகவுடன் இணைந்து செயல்பட்ட எடப்பாடியார் ஆட்சியில் கூட நீட் தேர்வு விலக்கு தரவில்லையே பாஜக அரசு.. கூட்டணியில் இருந்தபோதும் நீட் தேர்வு விலக்கு விஷயத்தில் தோற்ற அதிமுக அது பற்றி பேசாமல் இருப்பது நல்லது... பாராளுமன்றத்தில் அதிக உறுப்பினர்கள் வைத்து இருந்த காலத்திலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை அதிமுகவினரால்.. இப்ப திமுக ஆட்சியில்.. தந்துவிட்டால் கூட்டணி கணக்கும் உதைக்கும்... நீட்... நன்மையை தருமா என்பதைவிட திமுகவுக்கு அழுத்தம் தரும் விஷயமாக மாறி இருக்கிறது... ஆனால் இதை இப்படியே அனுமதித்து விட்டால் நாளை எல்லா கல்லூரிகளிலும் நுழைவுத்தேர்வு நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டு விடும்.. நீட் தேர்வு வந்த பிறகு அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்த மாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறது பாஜக.. 7.5 %இட ஒதுக்கீடு காரணமாக இருக்கலாம்.. ஆனால் என்ன ஒரு கேவலம் பாருங்க.. இட ஒதுக்கீட்டை எதிர்த்துப் பேசி வந்தவர்கள் எல்லாம் இப்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கேட்பதுதான்... மீண்டும்... நீட் தேர்வு.. ஒருபோதும் ஏற்க முடியாது.. அவசியமும் இல்லை..

சாத்தியமா?சவாலா?தெரியாது ஆனா சத்தியமா இந்தாண்டு நீட் உண்டு மாணவர்களே...நீங்க படிங்க....

அரசியல்வாதிகளே:

உங்க தேர்தல் அரசியலுக்கு ஒரு முடிவே இல்லையா?
மாணவர்கள் என்னப்பா பாவம் பண்ணாங்க?
ஐந்தாண்டு பதவிக்காக மாணவர்களின் வாழ்கையில் இப்படி விளையாடுறீங்களே? உங்களுக்கே நியாயமா இருக்கா?

சவால் என்பதைவிட சாத்தியம் இல்லை என்றுதான் கூறவேண்டும்.

குடியரசு தலைவரே கையெழுத்து போட்டாலும், உச்சநீதிமன்றம் அனுமதிக்காதவரை நீட்டை விலக்க முடியாது என்பது உலகறிந்த விஷயம். வீம்புக்கு திராவிட கட்சிகள் தேரை இழுத்து தெருவில் விடுறாங்க. 11 நீதிபதிகள் முடிவுசெய்யும்வரை இது கட்டாயம் அமலில் இருக்கும். மக்களை கேணையர்கள் ஆக்கிட்டாங்க.

https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/posts/2441256529364574?comment_id=2441344226022471
முடியாது என்று தெரிந்தும் வாக்குறுதி கொடுத்து விட்டு, பெற்றோர் மாணவர்களை முட்டாள் ஆக்குகிறார்கள். நீட் விலக்கு சாத்தியம் இல்லை.