தமிழ்நாடு

'எந்த மதத்திலும் தவறில்லை… எந்த உடையிலும் தவறில்லை!' - வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

Sinekadhara

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, பிப்ரவரி 9-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘ஹிஜாப் உடை பிரச்னை! எது சரி? எது தவறு?' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே. இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூக வலைதள பக்கங்களில் பகிரப்படும்.

இந்து மாணவர்கள் நீங்கள் காவி துண்டு போடுங்கள். முஸ்லிம் மாணவர்கள் நீங்கள் ஹிஜாப் அணியுங்கள்.
இரண்டையும் பள்ளி கல்லூரிக்கு வெளியே செய்யுங்கள். கல்வி நிலையங்களில் பள்ளி சீருடை அணிந்து அனைத்து மாணவர்களும் சமம் என்பதை நிலை நிறுத்துங்கள்

S.A. Jeelan
தயவு செய்து வன்முறையில் ஈடுபட வேண்டாம். உணவு, உடை மற்றும் இருப்பிடம் இவைகளில் எதையும் அடுத்தவர் முடிவு செய்யக்கூடியது இல்லை..பள்ளிக்குள் சீருடை அணிந்து கொள்வதும் அவசியம். அவரவர் சமய நம்பிக்கை சார்ந்த ஆடைகளை சீருடையின் வண்ணங்களில் நிர்ணயித்து அனுமதிக்கலாம்.

திரெளபதியின் ஆடையில் கை வைத்ததால்தான் மஹாபாரத போர் உண்டானது! இரவில் எப்போது ஒரு பெண் தனியாக நடந்து செல்ல முடிகிறதோ அன்றுதான் உண்மையான சுதந்திரம் என்றார் நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி!
எந்த மதத்திலும் தவறில்லை! எந்த உடையிலும் தவறில்லை!
Uniform என்பதே மாணவ மாணவிகளிடம் சமத்துவம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். இதில் மத அடையாளம் காட்டி பிரிப்பது ஏன்? பள்ளி பருவத்தில் மட்டுமே மனிதன் சமநிலையில் இருக்க முடியும்.அங்கும் ஏன் இந்த வெறித்தனம். வேண்டாம் கண்மணிகளே

உடை என்பது தனி மனிதனின் உரிமை ஆகும்.... பெரும்பாலும் இஸ்லாமியர்கள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வருவது வழக்கம்..
வகுப்பு அறைக்கு செல்வதற்கு முன்பு பள்ளி சீருடையில் தான் அமருவார்கள்.... பள்ளியின் உள்ளே ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி தவறு.

ஹிஜாப் தேவையற்றது.. அதை விரும்பி அணிவதும் அணியாததும் அவரவர் விருப்பம்.அதில் யாரும் தலையிடக் கூடாது என்பது என் கருத்து.

கல்வியா மதமா என்ற நிலைக்கு கர்நாடக அரசு குழந்தைகளை தள்ளுகிறது.

சமத்துவம் என்பது பள்ளியிலிருந்தே தொடங்க வேண்டும் என்றுதான் சீருடை திட்டமே வந்தது....மாணவர் மத்தியில் ஒற்றுமை பிறந்தால் என்றாவது ஒரு நாள் இந்தியாவில் ஒரே சாதி, ஒரே சுடுகாடும் வரும்..மதரீதியாகவும், சாதி ரீதியாகவும் மாணவர்கள் பிரிந்தால் இதற்கெல்லாம் வாய்ப்பேயில்லை...அதைத்தான் அரசியல் வாதிகளும் மதவாதிகளும் விரும்புகிறார்கள்….