தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஏப்ரல் 11ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘மொழி உரிமை, மாநில உரிமை, கல்வி உரிமை... தேசிய விவாதமாக உருப்பெறுகிறதா?' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
பெரும்பான்மையான மாநிலங்களை பாஜக ஆட்சி செய்து வருவதால் தமிழ்நாட்டிலும் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழர்களின் உரிமைகளை பறிக்கின்ற வேலையை, தமிழர்களின் உரிமை சார்ந்த விடயங்களை தேசிய விவாதமாக மாற்றுகின்ற வேலையை பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. அவ்வளவே
எந்த ஒரு விஷயமும் திணிக்கப்படும் போது அல்லது மறுக்கப்படும் போதுதான் விவாதம் என்ற நிலையை அடையும். இதுதான் இந்த தலைப்புக்கும் பொருந்தும். பாரபட்சம் காட்டாத ஒன்றிய அரசாங்கமாக இருந்தால் இது போன்ற பிரச்சனைகள் சுமூகமான த
உருப்பெற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளோம். பிறரது உரிமையில் தலையிட்டு,மாற்றத்தை ஏற்படுத்தியே ஆகனும் என்ற முடிவில்,அவர்களது விருப்பங்களைப் பிறர் மீது திணிக்கும் போது, சரியான நேரத்தில்,,இடத்தில் தம் எதிர்ப்பைக் காட்ட வேண்டியது மிக முக்கியம்.
திமுக எப்போதும் எல்லாம் மத்திய அரசுக்கு எதிர்கட்சியாக இருக்கிறதோ அப்போது எல்லாம் உறுப்பெற்று கொண்டு தான் இருக்கும்..
அவங்க மாநில உரிமையை விட்டுக்கொடுக்ககூடாது தேசியவிவாதமாக வந்தால்தான்.. மத்திய அரசுஅடக்கி வாசிக்கும்....!"