நெல்லை மாவட்டம் கும்பாவுருட்டி வனப்பகுதியில் மனிதர்களுக்கு, மலபார் அணில்களுக்குமான விநோத உரையாடல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
மனிதர்களின் அழைப்பை கேட்டு மரத்தில் இருந்து இறங்கி வரும் மலபார் அணில்கள், அவர்கள் கொடுக்கும் பழங்களை எடுத்துச் செல்கின்றன. அணில்கள் பொதுவாக மனிதர்களிடம் இருந்து விலகி இருக்கும் இயல்பு கொண்டவை என அறியப்பட்ட நிலையில், மலபார் அணில்களின் இந்த செயல்பாடு காண்பவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அணில்களுக்கு பழங்களைக் கொடுத்து பழக்கியதே இதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அணில்களுக்கு உணவளிப்பதையும் அவை உண்டு மகிழ்வதை காணவும் தற்போது அச்சன் கோவில் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருவது வாடிக்கையாகி உள்ளது.