Rohit Sharma-Ashwin Twitter
தமிழ்நாடு

”தோனியும் நெறையா பண்ணுவாரு; ஆனா, என்னமோ ரோகித் கிட்ட இருக்குங்க; அந்த நல்ல மனுசுக்கு” - அஸ்வின்!

தனது தாயாரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது குறித்தும். தனது தாயாரை காண உதவிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா குறித்தும் அஸ்வின் தனது X வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Kaleel Rahman

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்றது. இந்த தொடரின் 3வது போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இப்போட்டில் ஆடும் லெவனில் இருந்த அஸ்வின், திடீரென போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

R Ashwin

இதையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த தனது தாயாரை பார்த்துவிட்டு மீண்டும் அணிக்குத் திரும்பிய அவர், அடுத்தடுத்த போட்டிகளில் பல சாதனைகளை படைத்தார். இந்நிலையில், தனது தாயாரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது குறித்தும், தனது தாயாரை காண உதவிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா குறித்தும் அஸ்வின் தனது X வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்...

”Conscious இருக்காங்களான்னு கேட்டேன். இல்ல டாக்டர் பாக்க முடியாதுன்னு சொல்றாங்கன்னு சொன்னதும் தூக்கிவாரி போட்டுருச்சு. ஆனா அழுது கிழுது முடுச்சிட்டு ப்ளைட்டை தேடுறேன் ப்ளைட் இல்ல. ராஜ்கோட் ஏர்போர்ட்டை 6 மணிக்கெல்லாம் மூடிருவாங்க. அதுக்கப்புறமா ப்ளைட்டே கிடையாது. என்னடா பண்றது ஏதுன்னு சொல்லிட்டு இருந்தப்ப நான் யோசிக்கிறத பாத்த ரோகித், என்னா நீ யோசிக்கிற, மொதல்ல நீ கௌம்பு அதுதான் கரெக்டான விசயம். நான் சார்ட் arrange பண்ண முடியுமான்னு பாக்குறேன்னு சொன்னாரு.

Cricketer Ashwin

அதுக்கு அப்புறமா கமலேஷக்கு ரோகித் போன் பண்றாரு. கமலேஷ் போயிட்டீங்களா, அஸ்வினோட இருக்கீங்களா? கூடவே இருங்க தைரியம் சொல்லுங்க எல்லாம் பாத்துக்கோங்கன்னு சொன்னாரு. என்னால நெனச்சு கூட பாக்கமுடியல. ஒரு செகன்ட் சிந்துச்சேன். ஏன்னா, அவங்க ரெண்டு பேரு இருக்குறது பேச்சுத் தொனைக்குதான். அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்குறதுதான் கொஞ்சம் அதுல இருந்து எடுத்துக்கிட்டு வருது.

ஆனா, யோசுச்சுப் பாத்தேன். நம்மலே ஒருவேள கேப்டனா இருந்தா, ஒரு ப்ளேயருக்கு இந்த மாதிரி ஆயிருச்சுன்னா போயிட்டு வான்னு கண்டிப்பா சொல்லுவோம். அதுல மாற்றுக் கருத்தில்ல. அவன் என்ன பண்றான், எப்படி இருக்கான், ஏது இருக்கான் கூட போ, unbelievable, out standing லீடர ரோகித் மூலமா பாக்குறேன். நான் பல கேப்டன்ஸ், பல லீடர்ஸ்ஸோட பல வருசமா விளையாடியிருக்கேன். என்னமோ இருக்குங்க....

Dhoni - Rohit

அவனோட நல்ல மனுசுக்குதான் அஞ்சு ஐபிஎல் டைட்டில் அடுச்சிருக்கான். தோனிக்கு நிகரா டைட்டில் அடுச்சிருக்கான்னா கடவுள் ஒன்னும் சும்மா குடுக்கமாட்டாரு. Not a easy think, தோனியும் நெறையா பண்ணுவாரு. ஆனா, அவன் இன்னும் பத்து ஸ்டெப் முன்னே எடுத்து வைக்கிறான் என்று பதிவிட்டுள்ளார்.