தமிழ்நாடு

தருமபுரி: வார விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தருமபுரி: வார விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

kaleelrahman

ஞாயிறு விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல் சுற்றுலாதலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகளால் சுற்றுலா தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற இடம் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல். தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியாக குறைவாக வந்திருந்து. தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து, வினாடிக்கு 2000 கன அடியாக உயர்ந்தது. தொடர்து நீர்வரத்து அதிகரிப்பால், இன்று ஞாயிறு விடுமுறையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர்.

இதனால் வெறிச்சோடிக் கிடந்த ஒகேனக்கல், சுற்றுலா பயணிகளால் களை கட்டியது. இதனால் மெயின்அருவி, சினியருவி, பரிசல் துறை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவாக இருப்பதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.


ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்தும், அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும், மீன் சமைத்து உண்டும் மகிழ்ந்தனர். தொடர்ந்து விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் மசாஜ் தொழிலாளர்கள், பரிசல் ஓட்டிகள், சமையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.