Annamalai pt desk
தமிழ்நாடு

தருமபுரி: பொது அமைதியை குலைக்க முயன்றதாக 3 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு

பொது அமைதியை குலைக்கத் தூண்டும் வகையில் பேசியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

webteam

செய்தியாளர்: சே.விவேகானந்தன்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ’என் மண், எண் மக்கள்’ பாத யாத்திரையின் போது, நேற்று முன்தினம் (08.01.24) பொம்மிடி அடுத்த பி.பள்ளிபட்டி புனித லூர்து அன்னை தேவாலயத்திற்கு சென்றார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், மணிப்பூர் சம்பவத்தை வைத்து, அண்ணாமலை, மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து, முழக்கங்களை எழுப்பினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Annamalai

இந்நிலையில் பொம்மிடி காவல் நிலையத்தில் கார்த்திக் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், பாஜக தலைவர் அண்ணாமலை மீது 153 (A) (a), 504, 505 (2) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொது அமைதிக்கு குந்தம் விளைவிக்கும் நோக்கத்தோடு பேசுவது, பொது அமைதியை குலைக்கத் தூண்டும் வகையில் பேசுவது, வெவ்வேறு வகுப்புகளுக்கிடையே பகைமை மற்றும் வெறுப்புணர்வை உருவாக்கும் நோக்குடன் பேசுவது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.