தமிழ்நாடு

‘திருமணமானவருக்கு எனது மகளை மணமுடிப்பதா?” பெண்ணின் காதலரை சரமாரியாக தாக்கிய தந்தை

‘திருமணமானவருக்கு எனது மகளை மணமுடிப்பதா?” பெண்ணின் காதலரை சரமாரியாக தாக்கிய தந்தை

webteam

தாராபுரம் அருகே மகள் காதலித்த நபரை இரும்பு கம்பியால் தாக்கிய தந்தையை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாராபுரம் அடுத்த மூலனூர் அருகேயுள்ள மாலமேட்டில் வசித்துவருபர் குமார்(30). இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் மனைவியுடன் விவாகரத்து பெற்றுள்ளார்.

இந்நிலையில், குமாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகள் கீர்த்திகாவுக்கும் காதல் ஏற்ப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணின் தந்தை குணசேகரன் பல முறை இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் குமாரும் கீர்த்திகாவும் தங்களது காதலை தொடர்ந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன் இரும்பு கம்பியால் குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதையடுத்து குமார் மயக்கமடைந்து விழுந்ததை தொடர்ந்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் குணசேகரனை மடக்கிபிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

இரும்பு கம்பியால் தாக்கபட்டதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட குமாருக்கு தாராபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முதலுதவி செய்து, மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் .