தமிழக காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் தனியார் நிறுவனங்களில் பணி நியமன ஆணைகளை டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார்.
தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவின் பேரில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் வாரிசுகள் வேலைவாய்ப்பு பெறும் விதமாக காவல் வேலை வாய்ப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. டிஜிபி சைலேந்திரபாபுவின் நேரடி மேற்பார்வையில் காவலர் நலன் பிரிவில் தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இவர்களின் அதிகப்படியான சம்பளம் ஆண்டுக்கு ரூ. 3.5 லட்சம் ஆகும். இவர்களுக்குறிய பணி நியமன ஆணைகளை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார். காவல் வாரிசுகள் அதனை மகிழ்ச்சியுடன் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியின் போது காவல்துறை நலன், கூடுதல் டிஜிபி சைலேஷ் குமார் யாதவ், டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தின் மேலாளர் ஜோசப் பிரேம்ராஜ், சென்னை காவேரி மருத்துவமனை மேலாளர் டி.கே.சந்திரசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.