தமிழ்நாடு

மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்திய பிறகே கைது நடவடிக்கையை தொடர வேண்டும் - டிஜிபி உத்தரவு

webteam

ஒருவர் 7 ஆண்டுகள் வரை தண்டனை பெறும் குற்றத்தை செய்திருந்தால் கூட அவரை உடனடியாக கைது செய்ய வேண்டாம் என டிஜிபி திரிபாதி அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும், காவல்துறை ஆணையர்களுக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளதாவது, “7 அல்லது அதற்கு குறைவான ஆண்டு சிறை தண்டனை பெறும் குற்றத்தை செய்திருந்தால் கூட அவரை உடனே கைது செய்யக்கூடாது. விசாரணை அதிகாரி குற்றத் தன்மையை ஆராய்ந்து கைது செய்ய வேண்டிய அவசியத்தை முதலில் எழுத்து மூலம் பதிவு செய்ய வேண்டும். மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்திய பிறகே கைது நடவடிக்கையை தொடர வேண்டும்.

அவ்வாறு செய்யாத அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். ஏன் சிறையில் அடைக்கப்படுகிறார் என்பதற்கு உரிய விளக்கத்தை குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் தரவேண்டும். உச்ச நீதிமன்றம் தந்த அறிவுரைகளை முறையாக பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.