தமிழ்நாடு

தைப்பூசம்: பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

கலிலுல்லா

தைப்பூசத்தையொட்டி பழனி முருகன் கோவில் கிரிவலப்பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சூடம் ஏற்றி சூரிய வழிபாடு நடத்தினர்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டிருந்தாலும் பாத விநாயகர் கோபிலில் சாமி தரிசனம் செய்து கிரிவலப்பாதையில் பக்தர்கள் வலம் வந்து பிரார்த்தனை செய்கின்றனர். பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் சுமார் 500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று மாலை பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் கோயில் வளாகத்திற்குள்ளேயே நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதியில்லை.

கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டும் இதில் பங்கேற்பார்கள். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக வழிப்பாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு இன்றுவரை அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டிருந்த்து.