தமிழ்நாடு

மீனாட்சியம்மன் கோயிலின் ஆடி முளைக்கொட்டு உற்சவம்: பக்தர்களுக்கு அனுமதியில்லை !

மீனாட்சியம்மன் கோயிலின் ஆடி முளைக்கொட்டு உற்சவம்: பக்தர்களுக்கு அனுமதியில்லை !

jagadeesh

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெறும் ஆடி முளைக்கொட்டு உற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் வரும் 20 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 24 ஆம் தேதி ஆடிப்பூரம் அன்று காலை 10 மணியளவில் அம்மன் கோயில் மகாமண்டபம் பள்ளியறை முன்பு அம்மனுக்கு ஏற்றி இறக்குதல் வைபவம் நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பக்தர்கள் எவருக்கும் இந்நிகழ்வில் கலந்துக் கொள்ள அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது மேலும் கொரோனோ வைரஸ் தொற்று அச்சம் காரணமாக சீர்பாதம் இன்றி தினமும் ஆடிவீதியில் காலை, மாலை உலா வருவதற்கு பதில் அம்மன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் காலை மற்றும் மாலை வேலைகளில் புறப்பாடு நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது