தமிழ்நாடு

வழிபாட்டுத்தலங்கள் பக்தர்கள் செல்ல அனுமதி

வழிபாட்டுத்தலங்கள் பக்தர்கள் செல்ல அனுமதி

கலிலுல்லா

வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் செல்ல அரசு அனுமதி அளித்ததால், தமிழகத்தில் உள்ள கோயில்களில் பக்தர்கள் அதிகாலை முதலே சுவாமி தரிசனம் செய்தனர்.

அனைத்து நாட்களிலும் கோயில்களில் பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளதால், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலில் உள்ள நான்கு கோபுர வாசல் வழியாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வழக்கத்தை விட பக்தர்களின் வருகை குறைவாகவே காணப்பட்டது. அனைத்து பக்தர்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டது.

ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள், ராமநாதசுவாமி கோயிலில் வழிபட்டுச் சென்றனர். கடந்த வாரங்களில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், இன்று வழக்கத்தை விடை பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. திருச்செந்தூர் முருகன் கோயில், தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட கோயில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதே போல மசூதி, தேவாலயங்களிலும் பொதுமக்கள் வழிபட்டனர்.