தமிழ்நாடு

தேவர் ஜெயந்தி விழா: பசும்பொன்னில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

தேவர் ஜெயந்தி விழா: பசும்பொன்னில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

webteam

போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த கமுதி, பசும்பொன்னில் 94 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழா நேற்று யாகசாலை பூசையுடன் ஆன்மிக விழா தொடங்கியது.

இதையடுத்து இன்று முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் விழா கொண்டாடப்படுவதை ஒட்டி பல்வேறு மாவட்டம் மற்றும் கிராமங்களில் இருந்து மரியாதை செலுத்துவதற்காக பொதுமக்கள் காலை முதல் வந்து கொண்டிருக்கின்றனர்

இந்த நிலையில் கமுதி, பசும்பொன் உள்ளிட்ட பகுதிகளில் 94 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தொடர்ந்து கண்காணிப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நான்கு அதிநவீன ட்ரோன் கேமராக்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பசும்பொன் கிராமத்திற்குச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் போலீசாரின் முழுமையான பரிசோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.

இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு தொலைநோக்கு கருவி மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து பசும்பொன், கமுதி பகுதிகள் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.