திருநெல்வேலி மக்களவை தொகுதி  முகநூல்
தமிழ்நாடு

ELECTION 2024 | தொகுதி அலசல் | திருநெல்வேலி மக்களவை தொகுதி பின்னணி

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தினமும் ஒரு தொகுதி குறித்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் திருநெல்வேலி தொகுதி குறித்த அடிப்படைத் தகவல்களைப் பார்க்கலாம்.

PT WEB

நெல்வயல்கள் சூழ அமைந்த திருநெல்வேலித் தொகுதி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. ஆலங்குளம் தொகுதி தற்போதைய தென்காசி மாவட்டத்தில் உள்ளது.

திருநெல்வேலி சந்திப்பு

இவற்றுள் திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் எனக் கூறப்படுகிறது. இதுவரை திருநெல்வேலியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில், 7 முறை அதிமுகவும், 5 முறை காங்கிரஸ் கட்சியும், 3 முறை திமுகவும் இருமுறை சிபிஐயும் வெற்றி பெற்றுள்ளன.

இதில் அதிமுகவின் கடம்பூர் ஆர் ஜனார்த்தனன் 4 முறை இத்தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சராகவும் கடம்பூர்.ஆர். ஜனார்த்தனன் பணியாற்றியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பி.டி.தாணுப் பிள்ளை இருமுறையும், திமுகவின் டி. எஸ்.ஏ. சிவப்பிரகாசம் இருமுறையும் இந்தத் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவின் ஞான திரவியம் வெற்றி பெற்றார். ஞான திரவியம் 5 லட்சத்து 22ஆயிரத்து 623 வாக்குகளையும், அவருக்கு அடுத்த படியாக அதிமுகவின் மனோஜ் பாண்டியன் 3 லட்சத்து 37 ஆயிரத்து 166 வாக்குகளையும் பெற்றனர்.