உள்துறை செயலாளர் தீரஜ் குமார்  முகநூல்
தமிழ்நாடு

உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட தீரஜ் குமார்! யார் இந்த தீரஜ் குமார்? பின்னணி என்ன?

PT WEB

தமிழ்நாட்டில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று உத்தரவிட்டுள்ளார். இதில், முக்கியமானதாக பார்க்கப்படுவது உள்துறை. தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைகள் துறை செயலாளராக இருந்த அமுதா இடமாற்றம் செய்யப்பட்டு அந்த பொறுப்புக்கு தீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த தீரஜ் குமார்?

பீகார் மாநிலம் பாட்னாவை பூர்வீகமாக கொண்ட தீரஜ்குமார், 1993 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பிரிவில் தேர்வாகி தமிழ்நாட்டில் பணியை தொடங்கினார். 2021-ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை செயலாளராக பொறுப்பு வகித்துள்ளார். 2023-ஆம் ஆண்டு வணிக வரித்துறை செயலாளராக பணியமர்த்தப்பட்டார்.

தற்போது, தீரஜ் குமாரை உள்துறை செயலாளராக தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவரும் சூழலில் தீரஜ் குமாரின் இடமாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.