தமிழ்நாடு

அழிந்து வரும் கோலி சோடா

Rasus

கோலி சோடா பாட்டில்கள் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், கோலி சோடா தயாரிப்பு தொழில் அழிந்து வருகிறது.

தற்போதைய குளிர்பானங்களின் இடத்தை ஒருகாலத்தில் பிடித்திருந்தவை கோலி சோடாக்கள்தான். தற்போது பல்வேறு விதமான குளிர்பானங்கள் களமிறங்கிவிட்ட நிலையில் கோலி சோடாக்கள் காலியாகிக் கொண்டிருக்கின்றன. இதனால், கோலி சோடா தயாரிப்பில் முன்னிலையில் இருந்த காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், கோலி சோடா உற்பத்தி மையங்கள் களையிழந்து வருகின்றன. இந்நிலையில், கோலி சோடா பானம் அடைக்க பயன்படும், காலி பாட்டிலின் உற்பத்தியும் நின்று விட்டதால், இருக்கிற பாட்டில்களை வைத்து, தொழில் செய்து வருகின்றனர் இத்தொழிலை நம்பி உள்ளவர்கள்.

இதனிடையே, கோலி சோடாவுக்கு தேவையான மூலப்பொருள்களின் உற்பத்தி குறைந்ததோடு மூ‌லப்பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதாக கோலி சோடா உற்பத்தியாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஜிஎஸ்டி வரி காரணமாக கோலி சோடா உற்பத்தி தொழிலின் நசிவும் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.