தமிழ்நாடு

"இளங்காளையாக இருந்தபோது பல காளைகளை அடக்கியிருக்கிறேன்" - ஓ.பன்னீர்செல்வம்

"இளங்காளையாக இருந்தபோது பல காளைகளை அடக்கியிருக்கிறேன்" - ஓ.பன்னீர்செல்வம்

JustinDurai

இளம் வயது காளையாக இருந்தபோது பெரியகுளத்தில் பல காளைகளை அடக்கியதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைப்பது குறித்து செய்தி - விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் கேள்வி எழுப்பினார். அப்போது எழுந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், தாம் இளம் வயது காளையாக இருந்தபோது பெரியகுளத்தில் பல காளைகளை அடக்கியதாகக் கூறினார். மத்தியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசின்போது "காளை"யை விலங்குகள் பட்டியலில் சேர்த்ததால், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதாகவும், பின்னர் அதிமுக ஆட்சியில் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் 'ஜல் ஜல்' என்று நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, பீட்டா உள்ளிட்ட அமைப்புகளின் வழக்குகள் காரணமாக உச்சநீதிமன்றம்தான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தாகவும், மீண்டும் ஜல்லிக்கட்டு நடைபெற மக்கள் போராட்டம்தான் காரணம் என்றும் கூறினார்.

இதையும் படிக்க: "சனிக்கிழமைகளிலும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும்"- பதிவுத்துறை அமைச்சர் தகவல்