தமிழ்நாடு

“அரசு அதிகாரிகளை வைத்து பிரச்சாரம்” - துணை முதல்வர் மீது ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு

“அரசு அதிகாரிகளை வைத்து பிரச்சாரம்” - துணை முதல்வர் மீது ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு

webteam

அரசு அதிகாரிகளை வைத்து துணை முதல்வர் தேர்தல் பணிகளை மேற்கொள்வதாக புகார் வந்துள்ளதாக, காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே. எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையாவை தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், “இங்கு இருக்கும் தோழர்கள் சொன்னார்கள், வருவாய்த்துறை அதிகாரிகளை இணை முதலமைச்சரோ, துணை முதலமைச்சராகவோ உள்ள யாரோ தேர்தல் பணி பிரச்சாரங்களில் ஈடுபடச் செய்கின்றார்களாம். 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லோருமே மத்திய, மாநில அரசுக்கு எதிராக உள்ளனர். அவர்களது குறைகளை பிரச்சினைகளை தீர்க்கவில்லை என்பது மட்டுமல்ல, அரசை சந்தித்துப் பேசுவதற்கு கூட ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் வாய்ப்பு தராத அரசாங்கம் இந்த அதிமுக அரசு. ஆகவே ஒட்டுமொத்த ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கண்டிப்பாக திமுக காங்கிரஸ் தான் வாக்களிப்பார்கள். திமுக காங்கிரஸ் அமோக வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்தார்.