தமிழ்நாடு

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் தமிழகம் முதலிடம்.!

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் தமிழகம் முதலிடம்.!

webteam

நாட்டிலேயே அதிக அளவில் டெங்கு பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகத்தை மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு பலர் உயிரிழந்து வந்தனர். டெங்குவை உண்டாக்கும் கொசுக்களை ஒழிக்க மாநில சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. மேலும் நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டது. இருப்பினும் நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

கடந்த மாத இறுதி வரை தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 21,350 பேர் பாதிக்கப்பட்டிருந்ததாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் 2,531 ஆகவும், 2015-ல் 4,535 ஆகவும் இருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ள கேரளாவில் 19,694 பேர் இந்த ஆண்டில் பாதிக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.