தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் 136 பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை கிட்டத்தட்ட 4000 பேருக்கு டெங்குகாய்ச்சல் பாதிக்கப்பட்டு குணமானதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
பொதுவாக டெங்கு பாதிப்பானது மழைக்காலங்களில் அதிகரித்து காணப்படும். ஆனால் தற்போது கோடைக் காலம் என்றாலும்கூட ஆங்காங்கே கனமழை பெய்து வருவதால் கொசு தொடர்பான நோய்கள் அதிகமாக பரவி வருவதாகவும், அந்தவகையில் டெங்கு பாதிப்பும் அதிகரித்துள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தேனி, நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு அதிகமாக பரவி வருவதால் அந்த மாவட்ங்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியை பார்க்கலாம்