தமிழ்நாடு

காய்ச்சல் பாதிப்பு தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 16 பலி

காய்ச்சல் பாதிப்பு தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 16 பலி

webteam

டெங்கு மற்றும் மர்மக்காய்ச்சலால் ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தமிழகம் எங்கும் டெங்கு வேகமாக பரவி வருகிறது. உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். முறைப்படி தமிழகம் முழுவதும் டெங்குவால் இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பதற்கான புள்ளி விபரங்கள் அரசு சார்பில் தெரிவிக்கப்படவில்லை. இப்போதுதான் அமைச்சர் விஜயபாஸ்கர் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக கூறி வருகிறார். 

இந்நிலையில் மதுரை, கோவை,புதுக்கோட்டை,ராசிபுரம், மேட்டூர், சேலம், திருச்சி, ஈரோடு, கரூர், திண்டுகல், திருவண்ணாமலை உள்ளிட்ட ஊர்களில் டெங்கு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் இன்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் நாளுக்கு நாள் ‌அதிகரிக்கும் உயிரிழப்புக்கள் மக்களிடையே அச்சத்தை அதிகரிக்கின்றன.