தமிழ்நாடு

நித்யானந்தா ஆசிரமம் என நினைத்து பாஸ்கரானந்தா ஆசிரமம் இடிப்பு? அதிர்ச்சியில் பக்தர்கள்!

நித்யானந்தா ஆசிரமம் என நினைத்து பாஸ்கரானந்தா ஆசிரமம் இடிப்பு? அதிர்ச்சியில் பக்தர்கள்!

webteam

நித்யானந்தா என நினைத்து தன் ஆசிரமத்தை சேதப்படுத்தியதாக பல்லடம் காவல்நிலையத்தில் பாஸ்கரானந்தா புகார் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்தில் நித்யானந்தா போன்ற தோற்றத்தில் இருக்கும் பாஸ்கரானந்தா தமது பக்தர்களுடன் திரண்டு வந்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில், “கோவை செல்வபுரத்தைப் சேர்ந்த பாஸ்கரானந்தா ஆகிய நான் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆன்மீக பணி மேற்கொண்டு வருகிறேன். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை அருகே செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆசிரமம் அமைக்க சுமார் 1.5 கோடி வரை முன்தொகை கொடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்தேன்.

அதன்படி அந்த இடத்தில் கட்டப்பட்டு இருந்த ஆசிரமத்தில் கடந்த வாரம் 25 சவரன் தங்க நகைகள் காணாமல் போய்விட்டது. ஆசிரமத்தின் கட்டிடங்கள் முழுவதுமாக இடிக்கப்பட்டு இருப்பதாக வெளியூரில் இருந்த எனக்கு தகவல் கிடைத்தது. நேரில் சென்று பார்த்தபோது வங்கியில் கடன் பெற்றிருப்பதாக நோட்டீஸ் ஒட்டிவிட்டு அதற்கு தொடர்பு இல்லாத தனது ஆசிரம கட்டடங்களை சேதப்படுத்தி உள்ளனர்.

நான் பார்ப்பதற்கு நித்தியானந்தா சாமிகள் போல் இருப்பதால் எனது ஆசிரமம் மீது தாக்குதல் நடத்தி இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே எனது ஆசிரமத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார் பாஸ்கரானந்தா.