தமிழ்நாடு

“திறந்தநிலை பல்கலை.யில் முறையாக பெற்ற பட்டம் பதவி உயர்வுக்கு செல்லும்”- பல்கலை. பதிவாளர்

“திறந்தநிலை பல்கலை.யில் முறையாக பெற்ற பட்டம் பதவி உயர்வுக்கு செல்லும்”- பல்கலை. பதிவாளர்

PT WEB

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து முறையாக பெற்ற இளங்கலை, முதுகலை பட்டம் அரசுப்பணி மற்றும் பதவி உயர்வுக்கு செல்லுபடியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திறந்தநிலை பல்கலைக்கழகப் பதிவாளர் ரத்னகுமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "இளங்கலை பட்டப்படிப்பை படிக்காமல் நேரடியாக முதுகலை பட்டம் பெற்றதாலேயே செந்தில்குமார் என்பவருக்கு பதவி உயர்வை வழங்க முடியாது என உயர்நீதிமன்றம் கூறியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திறந்தநிலை பல்கலைக்கழகத்திலிருந்து முறையாக அதாவது பத்தாவது மற்றும் பிளஸ் டூவுக்குப் பின்னர் பட்டப்படிப்பை முடித்தால், அது மற்ற பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்பை போலவே செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 10, + 2, + 3 உடன் பெற்ற பட்டம் T.N.P.S.C. மூலம் நியமனம் செய்ய செல்லுபடியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திலிருந்து முறையான பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள், அதாவது பத்தாம் வகுப்பு அதன் பின்னர் பிளஸ் டூ முடித்து பெற்ற பட்டம் மற்ற பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்பைப்போல் செல்லுபடியாகும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.