தமிழ்நாடு

குப்பையாக வீசப்பட்ட பொருட்கள் - சேகரித்து கலைப் பொருட்களாக மாற்றிய பட்டதாரி

குப்பையாக வீசப்பட்ட பொருட்கள் - சேகரித்து கலைப் பொருட்களாக மாற்றிய பட்டதாரி

PT

அக்கம்பக்கத்தினரால் குப்பையில் வீசப்படும் பயனற்றப் பொருட்களை அழகிய கலை பொருட்களாக மாற்றிய இளைஞருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவர் பட்டதாரி இளைஞர் தினேஷ். இவர் சென்னையில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். கொரோனா ஊரடங்கால் இவர் பணியாற்றிய நிறுவனம் மூடபட்ட நிலையில், சொந்த ஊர் திரும்பிய தினேஷ் விடுமுறை நாட்களை பயனுள்ளதாக மாற்ற முடிவு செய்தார்.

அந்த வகையில் தனது வீடு மற்றும் அக்கம்பக்கத்தினர் வீடுகளில் பயனற்றப் பொருட்கள் என குப்பைகளில் வீசப்படும் பொருட்களான பழைய டூத் பிரஷ், தேங்காய் ஓடு, பயன்படுத்தபட்ட பேனா, ஸ்கெட்ஜ் பென்சில்கள், கொண்டை ஊசி, குளிர்பான பாட்டில் உள்ளிட்டவற்றைச் சேகரித்த தினேஷ் அதனை அழகிய கலை பொருட்களாக உருமாற்றியுள்ளார்.

பிளாஸ்டில் பாட்டிலை மேளமாகவும், பழைய பேனாவை நாதஸ்வரமாகவும் மாற்றிய தினேஷ் தேங்காய் ஓடை அழகிய டீ கோப்பையாக மாற்றிவிட்டார். இது மட்டுமன்றி தான் உருவாக்கியப் பொருட்களை அப்பகுதி மக்களுக்கும் வழங்கியுள்ளார். மேலும் தனது படைப்புகளை சமூக வலைதளங்களிலும் வெளியிட்ட தினேஷுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.