தமிழ்நாடு

தீர்ப்பை கேட்டுக் கதறி அழுத சிறுமியின் தந்தை

தீர்ப்பை கேட்டுக் கதறி அழுத சிறுமியின் தந்தை

rajakannan

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய மகளுக்கு ஏற்பட்டதுபோல், இனி யாருக்கும் நடக்கக் கூடாது என்று சிறுமியின் தந்தை கூறியுள்ளார்.

போரூர் சிறுமி கொலை வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 14ஆம் தேதி இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆள்கடத்தல், பாலியல் கொடுமை, கொலை உள்ளிட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால்,  குற்றவாளி தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு அளித்தார்.  

தீர்ப்பு அறிவிக்கப்பட்டதைக் கேட்ட சிறுமியின் தந்தை கதறிக் கதறி அழுத கட்சி அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பாபு, மகளின் மரணத்திற்கு நியாயம் கிடைத்துள்ளது என்றும் தன் மகளுக்கு ஏற்பட்டதைபோல், இனிமேல் யாருக்கும் ஏற்படக் கூடாது என்றும் கூறினார்.

மேலும், “ஹாசினிக்கு நியாயம் கிடைத்துள்ளது. ஓராண்டில் நியாயம் தீர்ப்பு திருப்தி அளிக்கிறது.குறிப்பிட்ட காலத்திற்குள் நீதி கிடைக்காது என்பதால்தான் பலரும் நீதி மன்றம் செல்ல தயங்குகின்றனர். ஆனால் அதனையெல்லாம் பொருட்படுத்தால் நான் போராடினேன். என்னுடைய போராட்டத்திற்கு அர்த்தம் கிடைத்துள்ளது. இதுபோன்ற மனிதர்கள் இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. எனது மகள் இறப்புக்கு நியாயம் கிடைக்க போராடிய மாங்காடு காவல்துறை, ஊடகங்களுக்கு மற்றும் நீதிமன்றத்திற்கும் நான் நன்றி கூறிக்கொள்கிறேன்” என்று அவர் உருக்கமாக பேசினார்.