தமிழ்நாடு

கட்டம் கட்டப்படுகிறதா தமிழகம்?

கட்டம் கட்டப்படுகிறதா தமிழகம்?

Rasus

கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கு வரும் நீரை தடுத்துநிறுத்தி  தமிழகத்தை கட்டம் கட்டி வருவதால், சில வருடங்களில் தமிழகம் தண்ணீரில்லாத பாலைவனமாக மாறிவிடும் அவலம் ஏற்பட்டுள்ளது. 

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 4 இடங்களில் தடுப்பணை கட்டும் பணிகளை தொடங்கியுள்ளது. இது தொடர்பான பிரத்யேக காட்சிகள் புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ளன. சித்தூர் மாவட்டம் சீதலக்குப்பம் பகுதியில், கொசஸ்தலை ஆற்றின் நீர்வரத்து கால்வாயான லங்கா கால்வாயில், இந்த தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக அணை கட்டுவதற்கான அடித்தளப் பணிகள் தொடங்கியிருக்கின்றன. தலா 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் இந்த நான்கு தடுப்பணைகளால் தமிழகத்திற்கு நீர்வரத்து கணிசமாக குறையும். இதனால், அந்த நீரை நம்பி 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாசன வசதி பெறும் 2 ஆயிரம் ஏக்கர் அளவுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.