தினசரி வானிலை அறிக்கை. முகநூல்
தமிழ்நாடு

அடுத்த சில தினங்களுக்கு மழைப்பொழிவுக்கான வாய்ப்பு எப்படி இருக்கிறது? வானிலை மையம் கொடுத்த ரிப்போர்ட்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை.

PT WEB

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை.

கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:

தமிழகத்தில் அநேக இடங்களிலும் (வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்) மற்றும் புதுவையிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பெய்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

சாத்தியார் (மதுரை) 11, கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி) 9, ஆண்டிபட்டி (மதுரை) 8, வாடிப்பட்டி (மதுரை), ஆற்காடு (ராணிப்பேட்டை), மண்டலம் 13 அடையார் (சென்னை) தலா 7, சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), லால்குடி (திருச்சிராப்பள்ளி), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), கள்ளக்குறிச்சி ARG (கள்ளக்குறிச்சி), எழுமலை (மதுரை), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), புலிப்பட்டி (மதுரை) தலா 6, ராணிப்பேட்டை (ராணிப்பேட்டை), அம்முண்டி (வேலூர்), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), மண்டலம் 13 அடையார் சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை), திருப்போரூர் (செங்கல்பட்டு), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), பரங்கிப்பேட்டை (கடலூர்), கோடம்பாக்கம் (சென்னை) தலா 5, பாலாறு அணைக்கட்டு (ராணிப்பேட்டை), வாணியம்பாடி (திருப்பத்தூர்), பொன்னை அணை (வேலூர்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), KCS மில்-2 கச்சிராப்பாளையம் (கள்ளக்குறிச்சி), மண்டலம் 10 கோடம்பாக்கம் (சென்னை), மேட்டுப்பட்டி (மதுரை), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை),

நிலக்கோட்டை (சென்னை), வைகை அணை (தேனி), உதகமண்டலம் AWS (நீலகிரி), சிங்கம்புணரி (சிவகங்கை), மானாமதுரை (சிவகங்கை) அடையார் (சென்னை), தேனாம்பேட்டை (சென்னை) தலா 4, அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), ஓசூர் AWS (கிருஷ்ணகிரி), சிவகங்கை (சிவகங்கை), YMCA நந்தனம் ARG (சென்னை), அம்மூர் (வாலாஜா இரயில்வே) (ராணிப்பேட்டை), காட்பாடி (வேலூர்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), R.K.பேட்டை ARG (திருவள்ளூர்), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), மேட்டூர் (சேலம்), தரமணி ARG (சென்னை), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), டிஜிபி அலுவலகம் (சென்னை), ஆண்டிபட்டி (தேனி), சோளிங்கர் (ராணிப்பேட்டை), கூடலூர் பஜார் (நீலகிரி), ஆரணி (திருவண்ணாமலை), வால்பாறை PAP (கோயம்புத்தூர்),

மேல் கூடலூர் (நீலகிரி), வாலாஜா (ராணிப்பேட்டை), மண்டலம் 09 தேனாம்பேட்டை (சென்னை), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), பொன்னமராவதி (புதுக்கோட்டை), கோயம்புத்தூர்-தெற்கு (கோயம்புத்தூர்), வேலூர் (வேலூர்), DSCL விருகாவூர் (கள்ளக்குறிச்சி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), குப்பணம்பட்டி (மதுரை), உசிலம்பட்டி (மதுரை), மண்டலம் 05 ராயபுரம் (சென்னை), எம்ஜிஆர் நகர் (சென்னை), ஓசூர் (கிருஷ்ணகிரி) தலா 3, மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ் (சென்னை), பேரையூர் (மதுரை),

மண்டலம் 08

மலர் காலனி (சென்னை), மண்டலம் 05 GCC (சென்னை), கொத்தவாச்சேரி (கடலூர்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), அரூர் (தர்மபுரி), திருப்புவனம் (சிவகங்கை), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), TNAU கோயம்புத்தூர் (கோயம்புத்தூர்), புகையிலை நிலையம் (VDR) (திண்டுக்கல்), வேடசந்தூர் (திண்டுக்கல்), மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), தாதியங்கர்பேட்டை (திருச்சிராப்பள்ளி), வேடசந்தூர் AWS (திண்டுக்கல்), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), வனமாதேவி (கடலூர்), KCS மில்-2 மூரர்பாளையம் (கள்ளக்குறிச்சி), பாரூர் (கிருஷ்ணகிரி), சமயபுரம் (திருச்சிராப்பள்ளி),

உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), தர்மபுரி (தர்மபுரி), சென்னை (N) AWS (சென்னை), புவனகிரி (கடலூர்), பாகூர் (புதுச்சேரி), மண்டலம் 13 U39 அடையார் (சென்னை), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), அரக்கோணம் (ராணிப்பேட்டை), மின்னல் (ராணிப்பேட்டை), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), பெரியபட்டி (மதுரை), கல்லிக்குடி (மதுரை), பாலக்கோடு (தர்மபுரி), மண்டலம் 07 U18 D81 வானகரம் (சென்னை), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), பெருங்குடி (சென்னை), அம்பத்தூர் (சென்னை) கோயம்புத்தூர் amfu AWS (கோயம்புத்தூர்) தலா 2, காமாட்சிபுரம் (திண்டுக்கல்), சேத்தியாத்தோப்பு (கடலூர்), மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), முக்கடல் அணை (கன்னியாகுமரி), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), மண்டலம் 02 மணலி (சென்னை), மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை), கிளன்மார்கன் (நீலகிரி), கேத்தி (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), கமுதி ARG (ராமநாதபுரம்), மண்டலம் 14 U41 பெருங்குடி (சென்னை),

மண்டலம் 06

திரு.வி.க.நகர் (சென்னை), செருமுள்ளி (நீலகிரி), துறையூர் (திருச்சிராப்பள்ளி), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை), மண்டலம் 08 அண்ணாநகர் (சென்னை), ராதாபுரம் (திருநெல்வேலி), போதானூர் இரயில் நிலையம் (கோயம்புத்தூர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), SRC குடிதாங்கி (கடலூர்), DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), திருத்தணி AWS (திருவள்ளூர்), உபாசி TRF AWS (கோயம்புத்தூர்), திருத்தணி PTO (திருவள்ளூர்), சோலையார் (கோயம்புத்தூர்), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), மண்டலம் 11 வளசரவாக்கம் (சென்னை), நத்தம் AWS (திண்டுக்கல்), தேவாலா (நீலகிரி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), TCS மில் கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), நத்தம் (திண்டுக்கல்),

போச்சம்பள்ளி ARG (கிருஷ்ணகிரி), சோழவந்தான் (மதுரை), சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை (தர்மபுரி), கல்லந்திரி (மதுரை), எண்ணூர் AWS (சென்னை), பெரியாறு (தேனி), நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), ராமநாதபுரம் (ராமநாதபுரம்), சூலூர் (கோயம்புத்தூர்), நாலுமுக்கு (திருநெல்வேலி), டேனிஷ்பேட்டை (சேலம்), விருதுநகர் (விருதுநகர்), போளூர் (திருவண்ணாமலை), பெரியகுளம் (தேனி), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), முசிறி (திருச்சிராப்பள்ளி), பூந்தமல்லி (திருவள்ளூர்), குடியாத்தம் (வேலூர்), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), பெலாந்துறை (கடலூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்), கோடியக்கரை (மயிலாடுதுறை),

தாலுகா அலுவலகம் திருப்பத்தூர் (திருப்பத்தூர்), பென்னாகரம் (தர்மபுரி), DSCL கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), மீனம்பாக்கம் AWS (சென்னை), ஆலங்காயம் (திருப்பத்தூர்), ஊத்து (திருநெல்வேலி), மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை), சின்கோனா (கோயம்புத்தூர்), மஞ்சளாறு (தேனி), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), தர்மபுரி PTO (தர்மபுரி), தேவாலா ARG (நீலகிரி), VIT சென்னை AWS (செங்கல்பட்டு), சென்னை விமானநிலையம் (சென்னை), சுருளக்கோடு (கன்னியாகுமரி), ஆலந்தூர் (சென்னை), சிட்டம்பட்டி (மதுரை), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), மண்டலம் 12 மீனம்பாக்கம் (சென்னை), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), செய்யார் ARG (திருவண்ணாமலை), கரியகோவில் அணை (சேலம்), மண்டலம் 03 மாதவரம் (சென்னை), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), மண்டலம் 12 D156 முகலிவாக்கம் (சென்னை), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), அண்ணா நகர் (சென்னை), திருவொற்றியூர் (சென்னை), தொண்டியார்பேட்டை (சென்னை), திரு-வி-கா நகர் (சென்னை), ராயபுரம் (சென்னை), பையூர் AMFU AWS (கிருஷ்ணகிரி), ராணிப்பேட்டை AWS (இராணிப்பேட்டை), திருவண்ணாமலை ISRO AWS (திருவண்ணாமலை) தலா 1.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை (சமவெளிப்பகுதிகள்):

அதிகபட்ச வெப்பநிலை :- பாளையம்கோட்டை: 35.1° செல்சியஸ்

குறைந்தபட்ச வெப்பநிலை :- ஈரோடு: 19.2° செல்சியஸ்

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

• வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

20.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

21.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

22.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

23.10.2024 தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

24.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

25.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

26.10.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்கடல் பகுதிகள்:

20.10.2024: அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

21.10.2024: அந்தமான் கடல் பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

22.10.2024: மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல், தெற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

23.10.2024: மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல், தெற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல், ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

24.10.2024: வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 90 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு - வட கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல், தெற்கு வங்கக்கடல், ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

20.10.2024: மத்தியகிழக்கு அரபிக்கடல், மத்தியமேற்கு அரபிக்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

21.10.2024: மத்திய அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

22.10.2024 முதல் 24.10.2024 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.

பா. செந்தாமரை கண்ணன்

இயக்குனர்

தென் மண்டல தலைவருக்காக

மண்டல வானிலை ஆய்வு மையம், சென்னை