தமிழ்நாடு

“மகனின் கொடுமை தாங்கமுடியவில்லை” - குன்னூர் நீதிமன்றத்தின் முன்பு தீக்குளிக்க முயன்ற தந்தை

webteam

நீலகிரி மாவட்டம் குன்னூர் நீதிமன்றத்தின் முன்பு முதியவர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரும், இவரது மனைவியும் தங்களுடைய மகன் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வரும் நிலையில் கடந்த 6 மாத காலமாக குடும்ப பிரச்னை காரணமாக ராஜேந்திரனுக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் வாக்கு வாதங்கள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து சித்திரவதை செய்து வருவதாக தந்தை ராஜேந்திரன் புகார் தெரிவித்தார்.

இதனால் தன்னுடைய உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் நீதிமன்றத்தின் முன்பு மண்ணென்னை ஊற்றி தீ குளிக்க முயற்சி செய்தார் ராஜேந்திரன். இதனை கண்ட காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

*****

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)