தமிழ்நாடு

தா.பாண்டியன் மறைவு: அரசியல் கட்சித் தலைவர்களின் நினைவலைகள்

தா.பாண்டியன் மறைவு: அரசியல் கட்சித் தலைவர்களின் நினைவலைகள்

kaleelrahman

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பகிர்ந்துகொண்ட நினைவலைகளை பார்க்கலாம்.

திருச்சி சிவா (திமுக)
தா.பாண்டியனின் மறைவு தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்திய அரசியலுக்கே மிகப்பெரிய இழப்பு. பொதுவுடைமை இயக்கத்தில் ஆழந்த பற்றும் கொள்கையில் தெளிவும் கொண்ட ஒரு மிகப்பெரிய அரசியல் மேதை என்றார் எம்பி. திருச்சி சிவா.

இல.கணேசன் (பாஜக)
எல்லா கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் போலவே தா.பாண்டினும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். அவரோடு பழகிய நாட்களை நான் நினைத்துப் பார்க்கிறேன். நல்ல மனிதர் ஒரு நல்ல நண்பரை நான் இழந்துவிட்டேன்.

தொல்.திருமாவளவன் (விசிக)

தோழர் தா.பாண்டியன் நம்மை விட்டு பிரிந்தாலும் அவரது சிம்மக்குரல் இன்னும் என் செவிகளிலே ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இவர் இவ்வளவு விரைவாக நம்மைவிட்டு பிரிவார் என எதிர்பார்க்கவில்லை. தா.பாண்டியன் என்ற பேராளுமையை நாம் இழந்திருக்கிறோம்.

டி.ராஜா (தேசிய பொதுச்செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட்)
தா.பா மறைவடைந்திருக்கிறார். இது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தமிழ்நாட்டிற்கும் ஏன் இந்தியாவிற்குமே ஒரு பேரிழப்பாக நான் கருதுகிறேன். தா.பாண்டியன் பன்முகத்தன்மை கொண்ட ஆற்றலை பெற்றவர். வழக்கறிஞராக, பேராசிரியராக, அரசியல் தலைவராக, பேச்சாளராக, எழுத்தாளராக இருந்திருக்கிறார். அவருடைய இழப்பு மிகப்பெரிய இழப்பாகும்.

ஜி.கே.வாசன் (தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர்)
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் தா.பாண்டியனின் மறைவு மிகுந்த வேதனைக்குரிய செய்தி. தன்னுடைய மனதில் பட்டதை தைரியமாக வெளிப்படுத்தக்கூடிய தலைவர். அவருடைய மறைவு தமிழக அரசியலுக்கு பேரிழப்பு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.