தமிழ்நாடு

தொழிற்பயிற்சி நிலையங்கள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புனரமைக்கப்படும் - சி.வி கணேசன்

தொழிற்பயிற்சி நிலையங்கள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புனரமைக்கப்படும் - சி.வி கணேசன்

Sinekadhara

தேனி அரசு தொழிற்பயிற்சி நிலைய ஆய்வுக்கு பின் தமிழக மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தேனியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் உள்ள 90 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விரைவில் புனரமைக்கப்படும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கட்டடம், கழிப்பறை, தங்கும் விடுதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் மட்டுமின்றி தொழில்கல்விக்கு தேவையான உபகரணங்கள் புதிதாக வாங்கப்பட்டு மேம்படுத்தப்படும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவும் தமிழக முதல்வருக்கு பரிந்துரைக்கப்படும். தமிழக முதல்வர் உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அங்கு செய்யவேண்டிய பணிகள் குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.