தமிழ்நாடு

நிரம்பியதா செம்பரம்பாக்கம் ? வைரலாக பரவும் மெசேஜ் உண்மையா ?

நிரம்பியதா செம்பரம்பாக்கம் ? வைரலாக பரவும் மெசேஜ் உண்மையா ?

webteam

சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியைத் தாண்டியுள்ளது.

மழை காரணமாகவும் கிருஷ்ணா நதி நீர் வரத்து காரணமாகவும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மொத்த நீர் மட்டம் 24 அடி என்றபோதிலும், தண்ணீரின் அளவு 21 அடியைத் தொட்டவுடன் பாதுகாப்பு கருதி ஏரி திறக்கப்படுவது வழக்கம் என்று சொல்லப்படுகிறது. ஆகையால் செம்பரபாக்கம் ஏரி திறக்கப்பட வாய்ப்பு இருக்கிறதா மற்றும் இதரவிஷயங்கள் குறித்து கேட்க பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டோம்.

அவர் கூறியதாவது “ செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 3.6 டி.எம்.சி. தற்போது ஏரியில் 2.6 டிஎம்சி அளவு தண்ணீர் உள்ளது. அடி அளவாக சொல்லவேண்டுமென்றால் சரியாக 20.16 அடி தண்ணீர் உள்ளது. தண்ணீர் திறப்பு பற்றிய தகவல்களை, ஏரியில் நிரம்பும் தண்ணீரைப் பொறுத்துதான் சொல்ல முடியும். அது குறித்தான முடிவுகளை உயர் அதிகாரிகளே எடுப்பர்.

செம்பரபாக்கம் ஏரி திறக்கப்பட்டால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா எனக் கேட்ட போது “டேங்க் அனைத்துமே காலியாகத்தான் உள்ளது. அதேநேரம் அந்தளவுக்கு நமக்கு மழையும் இல்லை. அப்படியே மழை அளவு அதிகமானாலும் நீர்வரத்தை பொறுத்துதான், வருகின்ற நீரை மட்டுமே செலவு செய்வோம். ஆகையால் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.” என்றார்.

கல்யாணி பாண்டியன்.