தமிழ்நாடு

சுருக்கு வலையை பயன்படுத்த எதிர்ப்பு - கடலூர் மீனவர்கள் வேலை நிறுத்தம்

சுருக்கு வலையை பயன்படுத்த எதிர்ப்பு - கடலூர் மீனவர்கள் வேலை நிறுத்தம்

webteam

சுருக்கு வலையை பயன்படுத்தக் கூடாது என கடலூர் மீனவ கிராம மக்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். 

மீன்வளம் அழிந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி சுருக்கு வலைகளுக்கு கடலூர் மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் அனுமதி வ‌ழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், சுருக்கு வலையை தடை செய்யக் கோரி பரங்கிப்பேட்டை, தின்னூர், அண்ணன் கோயில் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒருதரப்பு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், பரங்கிப்பேட்டை அண்ணன்கோயில் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த குமார் என்பவருக்குச் சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான படகு தீவைத்து கொளுத்தப்பட்டது. மேலும் 3 பைபர் படகுகளும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. படகுகள் எரிந்து சேதமடைந்த நிலையில், அப்பகுதியில் பதற்றம் ஏற்படாமல் தடுக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். படகுகள் கொளுத்தப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருதரப்பு மீனவர்களிடமும் காவல், வருவாய் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.