தமிழ்நாடு

புரட்டாசி கடைசி வாரம்: துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த மக்கள்! விலையால் ஏமாற்றம்

புரட்டாசி கடைசி வாரம்: துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த மக்கள்! விலையால் ஏமாற்றம்

webteam

புரட்டாசி மாதம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சுமார் நான்கு வாரங்களுக்கு பிறகு மீன் வாங்குவதற்கு சிறு வியாபாரிகளும் பொதுமக்களும் கடலூரில் குவிந்துள்ளனர். இதனால் மீன் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மீன் விலையிலும் சரிந்துள்ளது.

புரட்டாசி மாதம் என்றாலே இந்து மதத்தை சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் விரதமிருந்து கோயில்களுக்கு சென்று வழிபடுவது வழக்கமான ஒன்று. இதனால் புரட்டாசி மாதத்தில் மீன் மற்றும் இறைச்சி கடைகள் வெரிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் தற்போது 4 சனிக்கிழமை புரட்டாசி மாதத்தில் முடிந்த காரணத்தினால் இன்று கடலூர் துறைமுகப் பகுதியில் மீன் வாங்க நான்கு வாரத்திற்கு பிறகு கூட்டம் அலைமோதியது. பலரும் குறைந்த அளவு மீன் வந்த காரணத்தினால் விலை அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்களும் சிறு வியாபாரம் ஏமாற்றம் அடைந்தனர்.

வஞ்சிரம் மீன் கிலோ 900 ரூபாய் வரை விலை போனது. பாறை மீன், கிலோ 300 இருந்து 350 ரூபாய்க்கும், இறால் கிலோ 300 இருந்து 450 ரூபாய் வரைக்கும், சங்கரா கிலோ 300 இருந்து 400 ரூபாய் வரைக்கும் விலை போனதால் பொதுமக்களும் ஏமாற்றம் அடைந்தனர். ஆனாலும் இதனை போட்டி போட்டு பலர் வாங்கி சென்றனர். கடந்த நான்கு வாரமாக வெரிச்சோடி இருந்த கடலூர் துறைமுகம் இன்று சற்று கூட்டம் வர தொடங்கியது. இன்னும் புரட்டாசி முடிய இரண்டு நாட்கள் இருந்தும் ஓரளவு மீன் வாங்க கூட்டம் வந்ததால் வியாபாரிகளும் மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இது அடுத்த வாரத்தில் மேலும் அதிகரிக்கும் எனவும் மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்