தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் அலை

விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் அலை

நிவேதா ஜெகராஜா

விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் இன்று அலை மோதியது. 

விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாள் போன்ற காரணங்களால் சொந்த ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் பொது மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.

மூன்று நாள் விடுமுறையை அடுத்து சென்னையிலிருந்து வழக்கமாக 2,250 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் கூடுதலாக 1000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்று 300 பேருந்துகளும், இன்று 600 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட்டது. இருந்தும் திருவண்ணாமலை, திருச்சி, சேலம், வேலூர், தஞ்சாவூர் போன்ற மார்க்கங்களுக்கு செல்லும் பேருந்துகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பொது மக்கள் அதிக அளவில் குவிந்ததால், பேருந்துகளுக்கு நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் இருந்தது. பேருந்துகளில் முந்தி அடித்து கொண்டு மக்கள் ஏரியதால், அனைத்து பேருந்துகளும் மக்கள் கூட்டத்துடன் கோயம்பேடு பேருந்து நிலையத்தை விட்டு கிளம்பியது.

கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் நிலையில், பொது மக்கள் தனிமனித இடைவெளியின்றி பேருந்தில் பயணிப்பதால் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக கூறும் சமூக ஆர்வலர்கள், இனி பண்டிகை காலம் என்பதால் கூடுதல் பேருந்துகள் அரசு இயக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

- பால வெற்றிவேல்