தமிழ்நாடு

நாளை முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகளில் குவிந்த கூட்டம்!

நாளை முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகளில் குவிந்த கூட்டம்!

sharpana

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

நாளை தமிழகம் முழுக்க முழு ஊரடங்கு என்பதால் அனைத்து மதுபான கடைகளும் மூடப்படவுள்ளன. தமிழகத்தில் 5,600 மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் ஒரு நாள் ஒன்றுக்கு 70 லிருந்து 80 கோடி ரூபாய் வரை வியாபார நடைபெறும். வார இறுதிநாட்களில் 100 கோடி ரூபாய் வரை மதுபானம் விற்பனை நடைபெறும்.

இந்நிலையில், இன்று மதுபான கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. அப்படி, கூட்டம் அதிகமாக இருக்கும் கடைகளில் தனி மனித இடைவெளி கடைப்பிடிக்க வைப்பதோடு டோக்கன் முறையில் மது விற்பனை செய்யவும் முடிவுசெய்து இருகின்றனர்.