மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேட்டால் ரூ.718.36 கோடி அரசிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக பி.ஆர்.பி உட்பட 38 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் சருகுவலையப்பட்டி கண்மாய்களில் கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டதன் மூலம் அரசுக்கு ரூ.717.52 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சங்கர நாராயணன், செல்வம் உள்ளிட்ட 14 பேர் மீது 520 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதேபோன்று திருவாதவூரிலுள்ள கண்மாய்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக பி.ஆர்.பழனிசாமி மற்றும் பங்குதாரர்கள் 23 பேர் மீதான வழக்கிலும் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே 74 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 2 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.