தமிழ்நாடு

சிசிடிவி கேமராக்களால் குற்றங்கள் குறைந்துள்ளன: காவல் ஆணையர் தகவல்

சிசிடிவி கேமராக்களால் குற்றங்கள் குறைந்துள்ளன: காவல் ஆணையர் தகவல்

webteam

சென்னை மாநகரம் முழுவதும் சிசிடிவி கேமரா கண்காணிப்புக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கூறினார்.

சென்னை புதுப்பேட்டை புறக்காவல் நிலையத்தில் 48 கண்காணிப்பு கேமராக்களுக்கான கட்டுப்பாட்டு மையத்தை சென்னைப் பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மாநகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரவும், குற்றங்களைத் தடுப்பதற்கான முயற்சிகளையும் விரிவுபடுத்துவோம். சிசிடிவி கேமராக்களை நிறைய சோதனைகள் செய்துள்ளோம், நன்றாக காட்சிகளை பதிவு செய்கின்றன. ஆனால் எந்த குற்றமும் நடைபெறவில்லை. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதிலிருந்து வெகுவாக குற்றங்கள் குறைந்துள்ளன என்று கூறினார்.