கண்காணிப்பு கேமராவின் உதவியால் சென்னையில் செல்போன் மற்றும் சங்கிலிப் பறிப்பு குற்றங்கள் பெருமளவு குறைந்திருப்பதாக பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
செம்பியம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் 359 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் 40 இடங்கள், வீடுகள் மற்றும் தெருக்களில் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பதிவாகும் காட்சிகளை இரண்டு மாதம் வரை சேமித்து வைக்க முடியும் என காவலர்கள் கூறினர்.
கேமராவில் பதிவாகும் காட்சிகளை காவல் ஆய்வாளர் தனது செல்போன் மூலம் கண்காணிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கேமரா இருக்கும் இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் இருக்கும் இடத்தையும் ZOOM செய்து பார்க்க முடியும். இதன் தொடக்க விழாவில் பங்கேற்ற சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் குற்றவாளிகளை பிடிக்க உதவும் முக்கிய சாதனமாக சிசிடிவி கேமரா இருப்பதாக கூறினார்.