நாமக்கல் அருகே கிரிக்கெட் மட்டை தாக்கி உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மாணவனின் பெற்றோர் தொடர்ந்து மறுத்துவருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் விட்டம்பாளையம் அரசுப்பள்ளி விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவர்களுடன் ஆசிரியர் குப்புசாமி கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தபோது கிரிக்கெட் மட்டை நழுவிச்சென்று சித்தபூண்டியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவன் விஸ்வேஸ்வரனை தாக்கியதாக கூறுப்படுகிறது. அதில், கோமா நிலைக்குச் சென்ற மாணவன் 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கொலை வழக்காக பதிவு செய்து ஆசிரியர் குப்புசாமியை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரியும் உத்தரவிட்டுள்ளார். மேலும் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விஸ்வேஷ்வரன் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நாமக்கல் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்துவதாக கூறப்படுகிறது. எனவே, இந்த நிவாரணம் வழங்கும் வரை மாணவனின் சடலத்தை பெற போவதில்லை என்று பெற்றோரும், உறவினர்களும் கூறியுள்ளனர்.