தமிழ்நாடு

அரக்கோணம் அருகே நள்ளிரவில் தண்டவாளத்தில் விரிசல்.. பெரும் விபத்து தவிர்ப்பு..!

அரக்கோணம் அருகே நள்ளிரவில் தண்டவாளத்தில் விரிசல்.. பெரும் விபத்து தவிர்ப்பு..!

Rasus

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே நள்ளிரவில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சுமார் இரண்டு மணி நேரம் வரை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் மேல்பாக்கம் ரயில்நிலையம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக காட்பாடி செல்லும் மூன்று ரயில்கள் நடுவழியிலேயே ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

சென்னையில் இருந்து கோவை செல்லும் சேரன் அதிவிரைவு ரயில், சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் ரயில், சென்னையில் இருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு அதிவிரைவு ரயில் உள்ளிட்ட ரயில்களும் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டன. சுமார் இரண்டு மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் தவிப்புக்கு ஆளாகினர். விரிசல் தற்காலிகமாக சீர்செய்யப்பட்டதையடுத்து ஒவ்வொரு ரயிலாக இயக்கப்பட்டன. சரியான நேரத்தில் தண்டவாள விரிசல் கண்டறியப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.