தமிழ்நாடு

“திமுக புறக்கணிக்கிறது” - திருமங்கலத்தில் தனித்து போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Sinekadhara

திமுக தங்களை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டப்பட்டியுள்ளது. இதனால் திருமங்கலத்தில் இரண்டு வார்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி வேட்புமனுத் தாக்கலுக்கு இறுதி நாளான இன்று அனைத்துக் கட்சிகளும் விறுவிறுப்பாக வேட்புமனுத் தாக்கல் செய்து வருகிறது. இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இதில் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் 2-வார்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக திமுக கூட்டணியிடம் கேட்கப்பட்ட நிலையில் ஒரு வார்டு கூட தரவில்லை என்றும், வேண்டுமென்றே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை திமுக புறக்கணிப்பதாகவும், இரண்டு அமைச்சர்கள் இரண்டு மாவட்ட செயலாளர்கள் இருந்தும் தங்களை காக்க வைத்து தங்களுக்கு முறையான பதில் அளிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 2 மற்றும் 7 இல் தனித்துப் போட்டியிடுவதாகவும், அதனால் இந்த வார்டில் திமுகவுக்கு எதிராக வேலை செய்யப்போவதாகவும் மற்ற வார்டுகளில் திமுகவிற்கு ஆதரவாக வேலை செய்யவுள்ளதாகவும் தெரிவித்தனர்.