தமிழ்நாடு

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்

JustinDurai
(கோப்பு புகைப்படம்)
எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தமிழ்நாட்டில் தொடங்கி உள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் முறையான மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறியுள்ளார்.
முன்னதாக எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் 30 சதவீதம் கூடுதல் ஆபத்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது. தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 55 ஆயிரம் பேர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.