தமிழ்நாடு

சட்டையைக் கொத்தாகப் பிடித்து இளைஞரை தாக்கிய பெண் காவலர்: வீடியோ

சட்டையைக் கொத்தாகப் பிடித்து இளைஞரை தாக்கிய பெண் காவலர்: வீடியோ

webteam

கோவையில் இளைஞர் ஒருவரை பெண் தலைமைக்காவலர் தாக்கி இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது துறைரீதியான நடவடிக்கைகள் பாய்ந்துள்ளதோடு, இந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையமும் தலையிட்டுள்ளது.

கோவை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் தலைமைக் காவலர் கிருஷ்ணவேணி, காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருவோரிடம் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. சமூக வலைத்தளங்களிலும் இது குறித்து செய்திகள் பரவின. அண்மையில், இளைஞர் ஒருவரை காவல்நிலையத்தில், கிருஷ்ணவேணி தாக்கியதோடு, சட்டையைக் கொத்தாகப் பிடித்துக் கொண்டு இழுத்துச் சென்றார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.

பாதிக்கப்பட்டவர்கள் கோவை எஸ்.பி.யிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, தலைமைக்காவலர் கிருஷ்ணவேணி தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரிடம் துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையமும் தலையிட்டுள்ளது.

நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், இந்த வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. புகார் அளிக்க வருவோரிடம் லஞ்சம் கேட்டது, தாக்குதல் நடத்தியது குறித்து 2 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, கோவை எஸ்பிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது